Thursday, November 28, 2013

யார் இந்த சங்கரராமன்.....


தன்னை தானே வெட்டி தற்கொலை செய்து கொண்ட பாவ பட்ட சங்கரராமன் பற்றிய பதிவு தான் இது.

இந்தியாவில் சட்டம் என்பது ஏழைகளுக்கு மட்டுமே பணகாரர்களுக்கும், உயர் பதவி, உயர் சாதி காரனுக்கு கிடையாது என்பதை வெட்ட வெளிச்சம் ஆகிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கிய நல் உள்ளங்களுக்கு நன்றி...

இந்த காசுக்கு மண்டியிடும் நாய்கள் இருக்கும் வரை இந்தியாவில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்றே இல்லை என்று கொள்ளுக....


இந்த பதிவுOne India இந்த பதிவு சங்கர் என்பவரால் எழுத பட்டது. இந்த பதிவின் முக்கியத்துவம் கருதி, அவரின் பதிவை அப்படியே பதிவுயடுகிறேன்.

ஒரு செய்தியாளனாக என்னால் மறக்க முடியாத நபர், நண்பர். காஞ்சிபுரத்தில் நான் இருந்த நாட்களில் தினசரி காலையும் மாலையும் என்னை தவறாமல் சந்திக்க வந்துவிடுவார். அவருடன் ஒரு மெல்லிய துண்டு போர்த்திக் கொண்டு அவரது மகன் கொழுக் மொழுக்கென்று வந்து நிற்பான். சின்னகாஞ்சிபுரத்தைச் சேர்ந்த மகேஷ் என்ற நண்பர்தான் சங்கரராமனை அறிமுகப்படுத்தி வைத்தார். ஒவ்வொரு கோயிலிலும் நடக்கும் முறைகேடுகள் பற்றி துல்லியமாக புள்ளிவிவரம் தருவார் சங்கரராமன். எந்தக் கோயிலில் என்ன விசேஷம், அதன் வரலாறு, இப்போதுள்ள நிலைமை என எனக்குத் தேவையான விவரங்களை தினமும் தருவது அவர் வழக்கம். முடிந்தவரை தமிழகத்தின் அனைத்து கோயில்கள் பற்றியும் எனக்குப் புத்தகங்கள் தந்திருக்கிறார்... ஒரு நாள் விட்டு ஒருநாள் நான் எழுதிய கோயில் கட்டுரைகளை இப்போது தொகுத்தாலும் தனிப் புத்தகம் தேறும். அதற்கான பெருமை சங்கரராமனுக்குத்தான்!


ஒரு முறை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு 400 ஏக்கர் நிலமிருந்தும் ஒரு மூட்டை நெல்லுக்கு வழியில்லை என்ற தகவலை ஆதாரங்களோடு தந்தார். 'குத்தகைதாரர்கள் தெய்வத்தையே ஏமாற்றும் கொடுமையை யாரும் எழுதமாட்டறாளே' என குமுறினார். அதை படங்களோடு முதல் பக்க செய்தியாக்கினோம். சில தினங்களில் வரதராஜருக்கு வரவேண்டியவற்றில் ஓரளவுக்காவது வர ஆரம்பித்ததை மகிழ்ச்சியோடு சொல்லி, அந்தக் கோயிலின் பிரசித்தி பெற்ற பிரசாதமான 'படி இட்லி' - புதினா சட்னியை கொடுத்துவிட்டுப் போனார்!

இந்தக் கோயிலில் நடந்த இன்னொரு அக்கிரமம்... கட்டாய அர்ச்சனை டிக்கெட் விற்பனை. அதாவது கோயிலுக்குள் நுழையும்போதே இந்த டிக்கெட்டை பணம் கொடுத்து பெற்றே தீர வேண்டும். கிட்டத்தட்ட நுழைவுச் சீட்டு. இது மிகப் பெரிய மோசடி என்பதை கவனத்துக்குக் கொண்டு வந்தார் சங்கரராமன். அப்புறமென்ன.. முதல் பக்க செய்தியானது. அதன்பிறகு, அந்த டிக்கெட் கவுன்டர் காணாமல் போனது.

சங்கர மடத்தில் எதிர்மறையாக என்ன நடந்தாலும், அது செய்தியாக வெளிவரக் கூடாது என்பது எழுதப்படாத உத்தரவு. எனவே புதிதாக வந்த என்னிடம்தான் அவர் சங்கர மடத்து சமாச்சாரங்களை அதிகமாகப் பகிர்ந்து கொள்வார்.

அந்த மடத்தில் அடிக்கடி பிணங்கள் விழும். இளம் ஆண் பிணங்கள். அதனை எந்த செய்தித் தாளிலும் செய்தியாகப் பார்க்க முடியாது. அப்படியே வந்தாலும், மின்சாரம் தாக்கி பலி என்பதோடு நின்றுவிடும். பெரும்பாலும் குருகுலத்தில் படிக்கும் மாணவர்கள் அல்லது வெளி மாநில இளம் பக்தர்கள் இப்படி ஷாக்கடித்து இறந்திருப்பார்கள்.

அதி நவீன வசதிகள் அனைத்தும் கொண்ட சங்கர மடத்தில் ஏன் அடிக்கடி ஷாக் அடிக்கிறது என்பது குறித்து சங்கரராமன் சொன்ன பின்னணி பயங்கர ஷாக்கான சமாச்சாரம்! ஜெயேந்திரரைப் பார்க்க வரும் வெளி மாநில, வெளிநாட்டுப் பக்தர்கள், தரும் ரொக்க - தங்க காணிக்கைகள் குறித்து அவர் அடிக்கடி கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தார். சங்கரராமனுக்கு ஜெயேந்திரர் வைத்திருந்த பெயர் துஷ்டன்! நேருக்கு நேர் பார்த்தால் பக்கத்திலிருப்பவர்களிடம் 'இந்த துஷ்டப் பய எதுக்கு வந்திருக்கான் கேளு.. அவனை முதல்ல போகச் சொல்லு', என்பாராம். இதுவும் சங்கரராமன் சொன்னதுதான்.

எழுத்தாளர் அனுராதா ரமணன் ஜெயேந்திரர் மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகளை, தொன்னூறுகளிலேயே பலரிடமும் சொன்னவர் சங்கர்ராமன். பல முறை தன்னை யாரோ துரத்தியதாகவும், தாக்க முயன்றதாகவும் சங்கரராமன் சொல்வார். ஆனால் அதை பெரிதாக நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு நாள் தன்னை சங்கர மடத்து ஆட்கள் அடித்துவிட்டார்கள் என்று கூறி, முழங்காலில் ரத்த காயத்துடன் வந்தார். அதன் பிறகு அவரைப் பார்த்தாலே மற்ற நிருபர்கள் தெறித்து ஓட ஆரம்பித்தனர். 'இதுக்கு வேற வேலயே இல்ல. கண்டுக்காதீங்க... இதுமேலயும் தப்பு இருக்கு,' என்றனர்.

ஒரு கட்டத்தில் சங்கரராமன் தரும் எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை என்னால் செய்தியாக வெளியிட முடியவில்லை. காரணம், அலுவலகத்தில் பலரும் சங்கர மடத்தின் அறிவிக்கப்படாத பிஆர்ஓக்களாக செயல்பட்டதுதான்.

இதனால் நானே கூட சில சந்தர்ப்பங்களில் சங்கரராமனைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டேன். ஆனால் அந்த மனிதர் புரிந்து பக்குவமாகத்தான் நடந்து கொண்டார். டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு செய்திகள் கொடுக்க ஆரம்பித்த நேரம்... ஒருநாள் சங்கரராமன் வந்தார். 'சங்கர் சார், இந்த காமாட்சியம்மன் சந்நிதியில் நடக்கும் அக்கிரமத்தை எழுத மாட்டேளா... குடிச்சிட்டு பூஜை பண்றான்... வெளிப் பிரகார மண்டபத்துக்குள் சாயங்காலம் ஆச்சுன்னா யாரும் போக முடியாத அளவுக்கு அசிங்கம் நடக்குது.. அங்கங்க நிரோத் உறை கிடக்குது. எல்லாத்தையும்விட கொடுமை, மூலஸ்தானத்தில் அம்மனுக்கு சிறப்பாக நடக்கும் தங்க, வெள்ளி நாணய அபிஷேகம் முடிஞ்சதும், அந்த நாணயங்கள் எல்லாம் குறிப்பிட்ட நபரின் தனி கணக்கில் போய் சேருது... இதையெல்லாம் எப்போ எழுதுவேள்,' என்று வந்து நின்றார்.

"ஸாரி சங்கரராமன்... ஒரு வார்த்தை கூட இதுபத்தி இப்போ இருக்கிற பேப்பர்ல எழுத முடியாது," என்றேன். 'என்னண்ணா சொல்றேள்...' என சற்று அதிர்ச்சியுடன் கேட்டபடி வெளியேறினார் சங்கரராமன்.

ஆனால் அவருடனான நட்பில் மாற்றமில்லை. நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் வரதராஜ பெருமாள் கோயிலுக்குப் போனாலே போதும், எங்கிருந்தாலும் ஓடி வருவார்... ஒவ்வொரு பிரகாரம், சந்நிதிகளுக்கும் அழைத்துப் போய் கோயிலின் பெருமை சொல்வார். தவறாமல் படி இட்லி பிரசாதம் பெற்றுத் தருவார். அந்த ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள், கற்சங்கிலிகள் குறித்து அவர் தரும் விளக்கம் சிறப்பாக இருக்கும். கடைசியாக 2001-ம் ஆண்டின் டிசம்பர் மாதம் என்னைப் பார்க்க படி இட்லியோடு வந்திருந்தார் சங்கரராமன்.

பத்திரிகைகள் கைகொடுக்காத நிலையில், ஒரு நாள் தன்னுடைய சொந்த பெயரிலே 'எச்சரிக்கை' என்ற தலைப்பில் ஜெயந்திரர், விஜயேந்திரர், ரகு மற்றும் மேலும் சிலர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அதை திருத்திக்கொள்ளும்படி கேட்டு ஜெயந்திரருக்கு அனுப்பி வைத்தார்.


அடுத்த நான்காவது நாள், சங்கரராமன் ஒரு நாற்காலியோடு மல்லாக்க ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துப் பதைத்தேன்! இதையெல்லாம் விலாவாரியாக சொல்லக் காரணம், சங்கரராமன் என்ற மனிதர் ஜெயேந்திரருக்கு எந்த அளவுக்கு பெரும் தலைவலியாகத் திகழ்ந்தார் என்பதைச் சொல்லத்தான்!

Sunday, November 24, 2013

இரண்டாம் உலகம் ஒரு இயக்குனரின் பார்வையில் இருந்து பார்க்க வேண்டிய படம்.


படம் பார்த்து விட்டு வெளியே வரும் பொது ஒரு குழப்பமான சூழ்நிலையில் ல தான் வெளிய வந்தோம். யாரும் படம் நல்லா இருக்கா இல்லையா என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவது என்ற மண நிலை தான் காரணம். படம் நன்றாக இருக்கு என்று சொல்லவும் சில காரணங்கள் இருக்கிறது, அது போல் தான் நல்லா இல்லை என்று சொல்லுவதற்கும்.

பைக் ஸ்டான்ட் இல் செல்போனில் ஒருவர், அப்பா முடியலடா, தலை வழி என்று கூறி கொண்டு இருந்தான். சரி அது நமக்கு தேவை இல்லை. படத்தை பற்றி பார்போம்.


படம் நமது மக்களுக்கு பிடிக்காமல் அல்லது புரியாமல் போனதற்கு காரணம் என்று பார்த்தால்

இரண்டாவது உலகம் என்படவுது யாதனில் ,கற் காலத்தில் இருக்கும் ஒரு மனித கூட்டம், காதல் , நேசம் , பாசம், இறக்கம் இல்லாத ஒரு மூடர் கூடம், அங்கு காமம் உண்டு ஆனால் காதல் கிடையாது, ஆணாதிக்கம் உண்டு பெண்ணியம் கிடையாது, அங்கு ஒரு முரட்டு பொண்ணுக்கும், முட்டாள் முரடன்கும் இடையில் வரும் காதலா அல்லது இனகவர்ச்சியா என்று தெரியாத பந்தம் உருவாகிறது,

அங்கு ஒரு காதலை உருவாக்க ஒரு பெண் கடவுளும், அந்த கடவுளை கொன்றால் அந்த நாட்டு மக்களை அழித்து விடலாம் என்று இன்னொரு மனித கூட்டமும் இருக்கிறது.


இவை அனைத்தும் நமது உலகத்தில் இருக்கும் ஒரு காதலன் தனது காதலியை எதிர்பாராதவிதமாக இழந்து பைத்தியம் பிடிக்காத குறையாக சுற்றி திரியும் ஆர்யாவின் நினைவலைகள் அல்லது காதல் கடவுளின் சக்தியால் நமது உலகத்தில் இருந்து இந்த கற்காலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு காதல் என்னும் மலர் மலர உதவுவது என்பது போல் அமைந்து இருக்கும் ஒரு கதை தான் இந்த இரண்டாம் உலகம்.

Negative Points:


1.வெளிநாட்டு மக்களை தமிழில் பேசி நடிக்க வைத்தது. எதோ பழைய இங்கிலீஷ் படத்தே தமிழ்ல டப் செய்து வெளியிட்டது போல இருந்துச்சு, இதனால தான் படத்தில் ஒரு ஈர்ப்பு வாராமல் போனதற்கு முக்கிய காரணம்.

2. திரும்பவும் அதே வேட்டுட்டா, குத்தவா ரக பாடல்கள்.

3. பாடல்களை காட்சியமைக்க பட்ட விதம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் இல்லை. குறிப்பாகத் பணகள்ள பாடல் வரிகளில் வரும்,

“ஒரு பைத்தியம் பிடித்த பௌர்ணமி நிலவு மேகத்தை கிழித்து எரியும்” இது போன்ற வரிகள் பல எதிர்பர்புகளை ஏற்படுத்தி வைத்து இருந்தது.

Positive Points:


1.Graphics chance-அஹ இல்லை.. அவதார் பட ரேஞ்சுக்கு தமிழ் ஒரு படம். அதிலும் குறிப்பாக சிங்கம் என்று கூறி கொண்டு ஒரு வகை மிருகத்துடன் சண்டை இடும் காட்சி.

2. படத்தின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட் அனுஷ்காவின் ஆளுமை, அனுஷ்கா பதில் வேறு யாறும் அந்த கதாபத்திரத்தில் சிறப்பாக நடித்து இருக்க முடியாது.


3. படத்தின் மியூசிக் எல்லா பாடல்களும் திரும்பவும் கேட்க வைக்கிறது.

4. நம்மால் சிந்திக்க முடியாத ஒரு உலகத்தை நம் கண்முன்னால் காண்பித்தது. (ஆனால் நம்மால் தான் அதை ஏற்றுகொள்ள முடிய வில்லை என்பது வேறு விஷயம் )


படத்தை பற்றின எதிர்மறையான கருத்துகள் நிறைய வந்தாலும், கண்டிப்பாக திரை அரங்கிற்கு சென்று பார்க்க வேண்டிய திரை படங்களில் இதவும் ஒன்று. படம் திரை அரங்கை விட்டு செல்லும் முன்பு கண்டிப்பாக பார்த்து விடுங்கள்.

ஓநாயும் அட்டுகுட்டியும் மிஸ் பண்ணின மாதிரி இதையும் மிஸ் பண்ணி விடாதிர்கள். நான் வேறு யாரும் அல்ல உங்களுள் ஓருவன் தான்

Friday, November 22, 2013

பாதுகாப்பற்ற தானியங்கி இயந்திரம் (ATM)



நமது நாட்டில் உள்ள பல ATM தகுந்த பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது, அதற்க்கு பெங்களூர் ATM தாக்குதல் சரியான உதாரணம்.

சரி நானும் இங்கு அந்த நிகழ்வை பற்றி தான் பேச போகிறேன் அல்லது பாதுகாப்பை வளபடுத்த என்ன செய்ய வேண்டும் என்று பேச போவது இல்லை. ஏன் என்றால் அதை பற்றி பலர் பல விதமாக பேசி இருப்பார்கள். சரி இதை பற்றி நான் பேச போவது இல்லை என்றால் வேறு எதை பற்றி பேச போகிறேன் என்று நினைகிர்களா ????

நமது மக்கள் இடையில் இந்த காலகட்டதில் பரவும் ஒரு புத்திசாலிதனமான வதந்தியை பற்றி தான். இந்த கட்டுரை படிக்கும் 100இல் 99 பேருக்கு தெரிந்த விசயம் தான். ஆனால் அது உண்மை என்று நினைத்தால் Iam very very sorry my friend. ATM பின் நம்பரை நேர் எதிராக அடித்தால் பணம் வெளி வரும், அதே நேரம் பக்கத்தில் இருக்கும் காவல் நிலையத்திற்கும் தகவல் சென்று அடுத்த சில நிமிடங்களில் நம்மை காப்பாற்ற காவல் துறை ஹீரோ போல வந்து விடுவார்கள், அல்லது தமிழ் படத்தில் வரும் காவல் துறை போல படம் முடிந்த பிறகாவது வந்து விடுவார்கள் என்றால் நினைத்தால் Iam very very sorry my friend. இப்படி ஒரு சேவை இந்தியாவில் மட்டும் அல்ல உலகத்தில் சில நகரங்களை தவிர வேறு எங்கும் இந்த சேவை உயிரோடு இல்லை. என்பது தான் நிதர்சனமான உண்மை.

The concept of an alternative emergency PIN system, or duress code, for ATM systems has been around since at least July 30, 1986, when Representative Mario Biaggi, a former police officer, proposed it in the U.S. Congressional Record, pp. 18232 et seq. Biaggi then proposed House Resolution 785 in 1987 which would have had the FBI track the problem of express kidnappings and evaluate the idea of an emergency PIN system. HR785 died in committee without debate.

இந்த சட்டம் நடைமுறைக்கு வருவது முன்பே கலைக்க பட்டு விட்டது, அதற்கு பின் வரும் காரணங்கள் இந்த சட்டம் நடைமுறைக்கு வாராமல் போனதற்கு காரணம்.

உதாரணம் 1.

ஒருவரின் பின் நம்பர் 5555, 8888 என்று இருந்தால் அவர் எப்படி போட்டாலும் அவருது பின் நம்பர் அது தான்.

உதாரணம் 2.

ஒருவரின் பின் நம்பர் 1251. 8568 என்று இருக்கிறது என்றால் கை தவறுதலாக கூட இரண்டாவது மற்றும் முன்றாவது என்னை மாற்றி போட வாய்ப்பு இருக்கிறது,

எனவே காவல் துறைக்கு தேவை இல்லாத Fake Call’s அதிகமாக்க செல்ல வழி இருக்கிறது. என்று இந்த சேவை நடைமுறைக்கே வரவே இல்லை. ஆனால் 2006 இல் இருந்து இந்த சேவை இருபத்து போலவே பல சமுக தளங்களில் மற்றும் இமெயில் முலம் இது போன்ற பொய்யான தகவல் பரவி கொண்டு இருக்கிறது.

இந்த ATM Pin no reversal System உண்மையாக இருந்தால் இந்த நேரம் காவல் துறையும், வங்கியும் இப்படி ஒரு சேவை இருக்கிறது அன்று தகவல் வெளிவிட்டு இருப்பார்கள், அவர்கள் இதை பற்றி வாய் திறக்காமல் இருப்பதே இப்படி ஒரு சேவை பழக்கத்தில் இல்லை என்பதற்கு ஒரு சான்று.

நம்மில் சில புத்திசாலி நண்பர்கள் கேட்பார்கள், இந்த தகவல் வெளிய தெரிந்தால் திருடன் உசார் ஆகி விடமாட்டனா என்று ???அதனால் தான் இந்த தகவலை அரசாங்கம் வெளிய தெரிவிக்க வில்லை என்று.... இந்த விசயம் திருடனுக்கு தெரிந்தால் இவன் உண்மை சொல்லுகிறானே இல்லை போய் சொல்லுகிறானே என்ற குழப்பத்தில விட்டு சென்றாலும் விட்டு விடுவான்.

இது போன்ற இணையத்தில் பரவும் மேலும் சில பொய்யான பரப்புரைகளை பற்றின அவனகள் உடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன். நான் வெறும் யாரும் அல்ல.. உங்களுள் ஓருவன் தான்

Tuesday, September 24, 2013

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல்


தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறும். இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

நேரமும் இடமும்

இடம்:

TAG அரங்கம் (இயந்திரப் பொறியியல் துறை அருகில்) கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம்.

வழி:

  • மின்தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கிண்டி / சைதாப்பேட்டையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மாறி வர வேண்டும்.
  • பறக்கும் தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கஸ்தூரிபாய் நகர் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நடந்தும் (15 நிமிடங்கள்) பேருந்து மூலமாகவும் வரலாம்.

நேரம்:

  • காலை 09.00 மணி முதல் 12:30 மணி வரை விக்கிப்பீடியா பயிற்சிகள்
  • மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.

பகல் உணவு இடைவேளை 12:30 முதல் 03:00 மணி வரை. அருகில் உள்ள கல்லூரி உணவகத்திலும், அடையாறு பகுதியில் உள்ள உணவகங்களிலும் உங்கள் நண்பர்களுடன் உணவருந்தி விட்டு மாலை நிகழ்வுக்குத் திரும்பலாம்.
நிகழ்ச்சிக்கு உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுவோர், குழந்தைகள் என்று அனைவரையும் அழைத்து வரலாம். பதிவுக் கட்டணம் ஏதும் இல்லை.

ஏதாவது எடுத்து வர வேண்டுமா?


உங்கள் மடிக்கணினி, Data card, படம்பிடி கருவிகளைக் கொண்டு வந்தால் பயிற்சிகளில் பங்கெடுக்க உதவியாக இருக்கும். எனினும், இவற்றைக் கொண்டு வருதல் கட்டாயம் இல்லை.

நிகழ்ச்சி நிரல்


நாள்: 29-09-2013 ஞாயிறு 09.00 மணி முதல் 12:30 மணி
  • புதியவர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புப் பயிற்சிகள்
    • தமிழ்த் தட்டச்சு
    • தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்
    • விக்கிப்பீடியாவில் உலாவுதல், பயன்படுத்துதல்
    • விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல், படங்கள் ஏற்றுதல் மற்றும் பிற பங்களிப்பு வாய்ப்புகள்
  • ஏற்கனவே பங்களித்து வரும் முனைப்பான பங்களிப்பாளர்களுக்கான பயிற்சிகள்
    • சிறப்பாக பரப்புரை செய்வது எப்படி?
    • சிறப்பாக படங்கள் எடுப்பது எப்படி?
    • தானியங்கிகள் பயன்படுத்துவது எப்படி?
    • சிறப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.

  • வரவேற்புரை (2 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகளை இனிப்பு வழங்கி கொண்டாடுதல் (5 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களுக்குப் பங்களிப்பது குறித்த சிறு அறிமுகம் (15 நிமிடங்கள்)
  • முனைப்பான பங்களிப்பாளர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கல் (15 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி பற்றிய சிற்றுரைகள் (15 நிமிடங்கள்)
  • தமிழில் கட்டற்ற உள்ளடக்கம், தமிழிலும் இந்திய மொழிகளிலும் விக்கிமீடியா இயக்கத்தை வளர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் (60 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர் துரை மணிகண்டனின் நூல் வெளியீடு (15 நிமிடங்கள்)
  • பங்கேற்பாளர் வாழ்த்துரைகள் (15 நிமிடங்கள்)
  • நன்றியுரை (3 நிமிடங்கள்)

சிற்றுண்டி, தேநீர் வழங்கி நிகழ்வு நிறைவு பெறும்.

Tuesday, September 10, 2013

நீங்கள் ஹாக்கர் களின் Victim அக இருக்கிறீர்களா??? (ஹாக்கர் பகுதி - 2)


எனது முந்திய பதிவில் கூறிய படி இந்த பதிவில் நாம் எவ்வாறு எல்லாம் ஹாக்கர் களின் Victim அக இருக்கிறோம் மற்றும் நமது Password எப்படி இருக்க வேண்டும் என்றும் இந்த பதிவில் பார்க்கலாம்...

ஹாக்கர் என்பவன் ஏதோ வேற்று கிரகத்தில் இருந்து வந்து நமது PASSWORD எடுத்து செல்பவன் அல்ல. அவன் உங்களுடனும், என்னுடனும், ஏன் நமக்கு மத்தியில் இருக்கும் எவானோ ஒருவனாக கூட இருக்கலாம்.

சரி அவன் நமது password & Personal Details எடுத்து என்ன செய்ய போகிறான் என்று நினைத்தால். “Identity Thief” படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

A hacker can steal your passwords in Three mehtods. 1. dicitinory Method & 2. Brute force Method. 3. guessing method

  1. Dictionary Method:

    இந்த முறை முலம நமது dictionary இல் இருக்கும் அணைத்து வார்த்தைகளும் முயற்சி செய்து உங்கள் password என்ன வென்பதை 5 TO 10 MIN சொல்லிவிட முடியும்.

    இதனால முடிந்த வரை Dicitionary இருக்கும் வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. Eg. I Love Rajini Kanth என்பதை ILRK என்று வைத்து கொள்ளுங்கள்.

  2. Brute force Method.

    இந்த முறை முலம alphabeta வில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தாக முயற்சி செய்து பார்க்கும் a-z & A-Z, 0-9, & all Special Characters.

    நீங்கள் உங்கள் password il case Difference இல்லாமல் Password வைத்து இருந்தால் நான்கு இலக்க password கண்டு பிடிக்க எடுத்துகொள்ளும் நேரம் வெறும் 1 வினாடிகள் தான்.

    So ILRK can reveled within 1 sec only my friend. உங்கள் password crack செய்ய எவ்ளோ நேரம் எடுக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?? அப்படி என்றால் இந்த சுட்டிக்கு செல்லவும்.

  3. Guessing Method.

இது தான் மிகவும் சுலபம் ஆனதும் மற்றும் மிகவும் அபாயகரமானது ம் ஆகும்.

மேல குறிபிட்ட இரண்டு முறையும் டெக்னிக்கல் முறையில் password ஐ crack செய்யும் முறை. ஆனால் இந்த முறையில் எந்த டெக்னிக்கல் அறிவும் தேவை இல்லை. உங்களை பற்றி நன்றாக தெரிந்திருந்தால் போதுமானது.

இதை தான் நாங்கள் (ஹாக்கர்)Social Enginnering என்று சொல்லுவோம், FB & Twitter இல் உங்களுக்கு நண்பர்களாக இணைத்து, உங்களிடம் சாட் செய்து, உங்களிடம் நன்மதிப்பு பெற்று உங்களின் Personal Information ஐ எளிதாக பெற முடியும். கிழே இருக்கும் தகவல்கள் பெற உங்கள் Profile information, மற்றும் நீங்கள் போடும் Status & Tweet பார்த்தாலே போதும்.

உங்களுடைய bio-data, or personal information தெரிந்து இருந்தால் போதுமானது. இது போக பிடித்த நிறம், ஹீரோ, ஹீரோயின், பொழுதுபோக்கு. பிறந்த நாள், உங்களுகு பிடிதமனவரின் பெயர், பிறந்த தேதி, செல்ல பிராணி இன் பெயர், பிடித்த பாடல் வரிகள், உங்களுக்கு செல்போன் என். இது தவிர வேற எதை நீங்கள் PASSWORD அக வைத்து விட போகிரிகள்???

எகா. உங்கள் பேங்க் ATM Card – Pin number எவ்வாறு இருக்கும் ??

மொத்தம் 4 எண்கள் தான், எனவே பின் வருபவைகளில் எதனும் ஒன்று தான் கண்டிப்பாக இருக்கும்.

  1. பிறந்த வருடம் (இது உங்களுடையதோ இல்லை நெருக்கமானவர்கள் உடையோதோ இருகலாம், அல்லது இரண்டும் கலந்து கூட இருகலாம் எகா your DOB 1986 your lover DOB 1988 so ur Pin no may be 8688)
  2. பிறந்த தேதி (இது உங்களுடையதோ இல்லை நெருக்கமானவர்கள் உடையோதோ இருகலாம், அல்லது இரண்டும் கலந்து கூட இருகலாம் எகா your DOB 01/01/1980 so your pin no maybe 1186)
  3. உங்கள் செல்போனின் கடைசி நான்கு எண்கள் அல்லது முதல் நான்கு எண்கள், அல்லது உங்களுது துணையின் செல்போன் எண்கள்
  4. உங்கள் Bike / Car in reg no. or library membership card, Or Emp ID

மேல குறிபிட்ட எதோ ஒரு வகையுள் உங்களது pin no. வந்து விடும் (80% of the pin no are fall in this catagory only)

சரி நீங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் பயன்படுத்தும் எல்லா கணக்கும் ஒரே பாஸ் வோர்ட் தானே பயன்படுதுகிரிகள். அப்படி என்றால் ஒரு ஹாக்கர் உங்கள் எதனும் ஒரு ID yai hack செய்து விட்டால், உங்களுது அனைத்து ID யையும் எளிதாக ஹாக் செய்து விட முடியும்.


சரி ஒவ்வாரு கணகுக்கும் ஒவ்வாரு பாஸ் வோர்ட் பயன்படுத்தினால் நிகழ எந்த id க்கு எந்த password பயன்படுத்த கிறோம் என்பது மறந்து விடுகிறது என்ற காரணத்திற்காக ஒரு excel இல் save செய்து வைக்கவோ, அல்லது ஒரு பேப்பரில் எழுதி வைத்தோ கொள்ளதிர்கள்... அது இதை விட மோசமானது.

நான் உங்களுக்கு எளிதாக பாஸ் வோர்ட் வைப்பது எப்படி என்று சொல்லி தருகிறேன். நான் பயன்பதுதும் முறை இது தான். உங்களுக்கு உபயகோமாக இருக்கும் என்றால் பயன் படுத்தி கொள்ளுங்கள்,

  • Select any two names and two numbers set
    for an example.
  • singam & pulli
  • 1234 & 7890
  • use it in combined method.
  • SinGam@1234
  • PuLli@7890
  • SinGam@7890
  • PuLli@1234
  • 1234@SinGam
  • 7890 @ PuLli

இதனால் நீங்கள் ஒரு குறிபிட்ட 8 Password கிடைத்து விடுகிறது, ஒவ்வொரு கனகிர்க்கு இந்த 8 Password ஏதானும் ஒன்றை வைத்து கொண்டால். உங்களுக்கும் மறந்து விடாது.
Some of the commonly used Passwords are revelled all over the World.

நமது அடுத்த பதிவில் ஹாக்கர் களால் அவ்வாறு எல்லாம் தாக்க படலாம் என்பதை பார்கலாம். நான் வேறு யாரும் அல்ல, உங்களுள் ஓருவன் தான்.

Sunday, August 18, 2013

ஹாக்கர் (Hacker) ஒரு முன்னுரை.


ஹாக்கர் (Hacker) ஒரு முன்னுரை.


இணையத்தில் இருக்கும் அனைவரும் கண்டிப்பாக தெரிந்த கொள்ளவேண்டிய முக்கியமான் விசயம், Hacking, Hackers, நாம் எவ்வாறு ஹாக் செய்ய படுகிறோம், நம்மை எவ்வாறு தற்காத்து கொல்வது, எந்த விட தடயமும் இல்லாமல் எப்படி மற்றவர்கள் சிஸ்டம்ஸ் ஹாக் செய்யவது என்பது பற்றி இந்த தொடரில் பார்க்கலாம்....


Hacking என்று சொன்ன உடன் மனதில் hacker, Swordfish, Die hard -4 என்ற படத்தில் வருவது போல ஹக்கர் அக வேண்டும் என்ற எண்ணத்தில் கூகிள் அணுகினால் உங்களுக்கு உற்படியாக ஒன்றும் கிடைக்காது. முதலில் இந்த கான்செப்ட் நியாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். “ Dont Learn To Hack, But Hack To Learn:


நான் நிறைய பேரை இணையத்தில் பார்த்து இருக்கிறேன். அவர்கள் அனைவரும் Over nite il Obama அக வேண்டும் என்று தான் நினைகிறர்களே தவிர, கற்று கொள்ள நினைப்பது இல்லை.


Dont Search in Google by, “ How do hack gmail / facebook / twitter”


எவனோ ஓருவன் ஒரு Opensource Software செய்து அதை உங்களுக்கு இணையம் முலம இலவசமாக வழங்கி, அதில் யாருடைய password உங்களுக்கு வேண்டுமோ அதில் User ID எண்டர் செய்தால் தரும் அளவுக்கு எந்த Automated Software உம் கிடையாது,


மேலும் இது போன்ற ஒரு automated Software முலம தனது Server il Vulnerability இருக்கும் அளவுக்கு எந்த நிறுவனமும் Server Maintences பண்ண மாட்டார்கள்.


என்னவே கூகிள் இல் இது போன்று தேடுவதை நிறுத்துங்கள். ஆனால் உண்மையுள் Google is the best application to steal infromation from websites. but you have to use your KEYWORDS properly. இதை பற்றி பின் வரும் பதிவுகளில் பார்க்கலாம். ஏன் என்றால் இதை பற்றி மட்டுமே ஒரு தனி பதிவு போடலாம். அந்த அளவுக்கு Google Hacking பற்றி இருக்கிறது.


இணையத்தில் நமது பாதுகாப்பு மிகவும் முக்கியம். அதற்கு என்று Anti-Virus Software மட்டும் இருந்தால் போதும் என்று நினைத்தால் உங்களை போன்று ஒரு முட்டாள் கிடையாது. Anti-virus Software என்பது உங்களது கணினியில் இருக்கும் அல்லது பாதிப்பு உண்டாக்கும் மென்பொருள் பதிவிறக்கும் பொது அலெர்ட செய்யும், மற்றும் அதை தடுக்க உங்களுக்கு ஒரு அலெர்ட் குடுக்கும், அவள்ளுவே....


அனால் Hacker’s என்பவர்கள் இது தெரியாதே மூடர்கள் அல்ல. ஹாக்கிங் என்பது ஒரு Default Systemஇல் அதன் போக்கில் சென்று அதில் உள்ள Loop-Holes என்பதை அறிந்து, அதன் முலம அந்த System மை தகர்பவர்கள்.


உங்களுக்கு புரிவது போல சில எ.கா: •

  • Ctrl+C குடுத்து நீங்கள் copy பண்ணி வைத்து இருக்கும் தகவல்களை பெறுவதற்கு சில Script Lang போதும். எதைவாது நீங்கள் காப்பி செய்து விட்டு இந்த சுட்டியை கிளிக் செய்யவும்.


இப்பொழுது நீங்கள் காப்பி செய்து வைத்து இருக்கும் தகவல் அந்த இணையத்தில் O/P அக கிடைக்கும், இதை எல்லாம் எந்த Anti-virus Software உம் தடுக்காது. இதுபோன்று சில Cookie-Stealing Programmes இருக்கின்றேன...நீங்கள் உங்களுது browser இல் Auto-Login குடுத்து வைத்து இருந்திர்கள் என்றால், I’m Sorry Bro, உங்கள் Browser, உங்களுது User-Id, & Password ai Save செய்து வைத்து இருக்கும். இது ஹாக்கர் களுக்கு மிகவும் எளிதாக உங்கள் User-Id, & Password ஐ எடுத்து கொள்ளுவார்கள்.


இதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது FB & Twitter இல் Unknown Persons குடுக்கும் Link ஐ நீங்கள் Click செய்தாலே போதுமானது, அவர்களுக்கு உங்கள் தகவல் அணைத்து சென்று விடும்.


மேலும் நீங்கள் இலவச மென்பொருள் பயன்பட்துவோரக இருபிர்கள் என்றால், அது browser il automatic அஹ சில tool-box இன்ஸ்டால் பண்ணி இருந்தால் அவற்றையும் முதலில் நிக்கி விடுங்கள்.....

  • சில மாதங்களுக்கு முன்பு FB il கிட்டதிட்ட அணைத்து User ID களும் Tag செய்ய பட்டு ஒரு காணொளி வெளியானது, An Women With An Axe, நியாபகம் இருக்கிறதா... அது இது போன்ற ஒரு Cookie-Stealing Programme தான், •
  • மேலும் Twitter இல் நீங்கள் எந்த DM மும் அனுபாமல் அனால் உங்கள் followers அனைவர்க்கும் உங்களுது பெயரில் ஒரு DM சென்று இருக்கும். அதில் ஒரு விளம்பரமும், ஒரு link உம் இருந்து இருக்கும், அதை கிளிக் செய்த அனைவருது Data வும் திருட்டு போய் விடேன்.

An Unconfirmed News that, HAckers had Stealed more then 500 million FB, Twitter Accounts with that link’s.


எனவே நீங்கள் உங்களது பாஸ்வார்டு ஐ மாற்றி 6 மாதங்களுக்கு மேல் இருக்கும் ஆயின் முதலில் மாற்றி விடுங்கள்.


FB & Twitter இல் கண்டகண்ட appஐ use பன்னுபவராக இருந்தால் முதலில் உங்கள் செட்டிங்க சென்று எண்ணென APP பயன்பாட்டில் இருக்கின்றேனே, எவை எவை தேவை இல்லை என்று கண்டோறிந்து அவற்றை முதலில் Delete செய்யுங்கள்.


முதலில் நீங்கள் எவ்வாறு எல்லாம் தாக்க படலாம் என்று அறிந்து கொண்டால், நம்மை தற்காத்துக்கொள்ளவும் முடியும், அதே முறையில் மற்றவர்களை தாக்கவும் முடியும்.


இதன் அடுத்த பதிவில் நாம் எல்லாரும் எப்படி Hacker’s kku Victim ஆகிறோம் என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். நான் வேறு யாரும் அல்ல.... உங்களுள் ஓருவன் தான்....

Sunday, February 03, 2013

விஸ்வரூபத்தின் பாதிப்புகள்....

தமிழ்நாட்டு மக்கள் உண்மையில் தனது கதாநாயகனை கடவுள் க்கு சமமாக தான் பார்ப்பவர்கள். இல்லை என்றால் ஒரு நடிகனின் படம் வெளிவரும் பொழுது பால் அபிஷேகம், காவடி எடுப்பது, யாகம் நடத்துவது, ரத்த தானம் என்று ஒரு பெரிய ரகளைய நடக்காது .

தமிழனக்கு உன்ன உணவு இருக்கிறதோ இல்லையோ Cricket Score தெரிய வேண்டும், தனது தலைவனின் படத்திற்கு First Day First Show Ticket வேண்டும்.


பால் விலை, பஸ் கட்டண உயர்வு, மின்சாரம், தண்ணிர் பற்றாகுறை என்றால் கூட வீதியில் இறங்கி போராட்டம் செய்ய மாட்டார்கள், அதே சமயம் ஒரு நடிகனுக்கு எதாவது பிரச்சினை என்றால் அவ்ளோ தான்... என்ன வேண்டுமென்றால் செய்வார்கள். அப்பற்பட்ட தமிழர்கள் நாம் எல்லாம்.

தமிழகத்திற்கு மட்டும் அல்ல இந்தியா அளவில் ஒரு புகழ் பெற்ற An National ICON என்று வருணிக படும் அளவுக்கு புகழ் பெற்ற ஒரு சினமா காரனை தனது வோட்டு வங்கி அரசியலுக்கு பலி கடா வாக்க பார்த்தார்.

விஸ்வரூபம் படம் Release ஆனால் சில பாதிப்புகள் தமிழகத்தில் ஏற்படும் என்று சில முஸ்லிம் அமைப்புகள் கூறினார்கள். ஆனால் உண்மையில் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன என்பதை பார்க்கலாம்.

Positive Feed Back:

அந்த கணத்தில் இருந்து நமது தமிழக கமல் ரசிகர்கள் கமலுக்கு ஆதரவாக களம் இறங்க ஆரம்பித்தது விட்டார்கள். கமலுக்கு சார்பாகக் இணையம் முழுவதும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தது விட்டார்கள். இணையத்தில் பெரும் புரட்சி போல அனைவரும் தனது Profile Picture காக கமல் ஹாசன் படம் வைத்து அதரவு செய்ய ஆரம்பித்தது விட்டார்கள்.

இது வரை திருட்டு டிவிடிக்கு எதிராக யார் யார் எல்லாமா பிரச்சாரம் செய்தார்கள். என் கமல் ஹாசன் கூட அதை பற்றி பேசி இருக்கிறார். அப்பொழுது எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அதை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை. ஆனால் இப்பொழுது அனைவரும் New Year Resolution எடுப்பது போல், விஸ்வரூபம் படத்தை திரை அரங்கில் மட்டுமே பார்போம், விஸ்வரூபம் படம் திரை இடும் வரை திரை அரங்கு செல்ல மாட்டோம் என்று இணையத்தில் 50% வரை தனது Status Update, Twitter, Google+, என்று எல்லாவதிலும் update செய்ய ஆரம்பித்தது விட்டார்கள். எகிப்து இணைய புரட்சி போல Twitterஇல் கமல் ஹாசன் என்று ஒரு Trend, World wide உருவாக்க ஆரம்பித்து விட்டது.


இணையத்தில் எங்கும் விஸ்வரூபத்தின் படம் கிடைத்தால் அதை Download செய்யாமல் உடனடியாகக கமலில் மையம் அமைப்புக்கு தகவல் குடுத்து மட்டும் அல்லாமல். அந்த லிங்க் இல் சென்று for Our Kamal Hassan Pls Dont Download ThIs Link னு comment குடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.


உண்மையுள் இது ஒரு நல்ல மாற்றம் தமிழக திரை உலகத்திற்கு மட்டும் அல்ல. உலக திரை உலகத்திற்கும்

“வாடிய பயிரை கண்ட பொழுது எல்லாம் வாடினேன் என்பது போல் “ ஒரு கலைஞன் கஷ்ட படுகிறான் என்ற உடன் அவனுக்கு பணம் அனுப்பும் வள்ளல்கள் இங்கு தான் இருக்கிறார் கள்.

Negative Feed Back:

எந்த விசயம் நடந்து விட கூடாது என்று முஸ்லீம் நண்பர்கள் நினைத்தார்களோ. அது நடந்து விட்டது. இது வரை அவர்களுக்கு மட்டும் நினைத்து கொண்டு இருந்த ஒரு பொய்யான விவாதம். இப்பொழுது அனைவரின் கண்களுக்கும் தெரியும் படி அவர்களே செய்து கொண்டு விட்டார்கள்.

இது வரை எந்த சினிமாவை பார்த்தும் முஸ்லீம் அனைவரும் தீவிரவாதிகள் என்று என்னதா நாங்கள் இப்பொழுது நடக்கும் பிரட்சனைகள் கலை பார்க்கும் பொழுது ஒரு வேலை அப்படி தான் இருக்குமோ என்று என்ன வைத்து விட்டார்கள்.

என் என்றால் குற்றம் உள்ள நெஞ்சம் தான் குறுகுறுக்கும் என்பார்கள். இவர்களுக்கு குருகுறுகிறது என்றால் எதோ இவர்கள் பக்கம் தவறு இருக்கிறது என்று தானே அர்த்தம என்று எல்லோர் மனதிலும் எண்ணம் வலுக்க் தொடங்கி உள்ளது.

ஆனால் படம் தடை செய்ய பட்டத்திற்கும், இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது ஊர் அறிந்த விஷயம். இது தேவை இல்லாமல் ஒரு சிலரின் அரசியில் உள்ள நோக்கடிற்காக அரசியல் அக்க பட்ட விஷயம். என்னவே இவர்களை பற்றி பேசுவது நமது சமுதாயத்திற்கு நல்லது அல்ல. ஊர் இரண்டடு பட்டால் கூத்தாடி க்கு தான் சந்தோசம். நமக்கு அல்ல. என்னவே இந்த நேரத்தில் அமைதி காப்பதுதான் நல்லது.


வீரத்தின் உச்சகட்டம் அகிம்ச்சை. இந்த அரசியல்வாதிகளை நாம் தேர்தலில் பார்த்து கொள்ளலாம். விஸ்வரூபம் தின் தொடர் போராட்டங்கள் நமது அடுத்த பதிவில் பார்க்கலாம். நான் வேறு யாரும் அல்ல உங்களுள் ஓருவன்.